பிராம்டன் நினைவுத் தூபி இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு கொடுத்த முதல் அடி!

You are currently viewing பிராம்டன் நினைவுத் தூபி இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு கொடுத்த முதல் அடி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்ட பின்னர், அதற்கு பதிலாக அமைக்கப்பட்டதுதான் கனடாவின் பிராம்டன் நகரில் அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி என ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்த நினைவிடம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவுத்தூபியை உடைத்தற்காக மட்டும் அல்ல கனடா, லண்டன், ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியா போன்ற இடங்களில் எங்களுடைய மக்களை, எங்களுடைய அமைப்புக்களை பிரிக்க நினைக்கின்ற இலங்கையினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு வைத்த முதல் அடி.

அதுமட்டும் இல்லாமல், எமது மக்களுக்கு இனஅழிப்பு நடக்கவில்லை என்று கொண்டுவரப்பட்ட இமாலய பிரகடனத்துக்கு எதிராக ஒரு அடையாளத்தை உருவாக்கப்பட்டதுதான் இந்த நினைவகம் என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply