பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100 சதவீத வரி! அதிபர் டிரம்ப் அதிரடி !

You are currently viewing பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100 சதவீத வரி! அதிபர் டிரம்ப் அதிரடி !

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில் நேற்றையதினம் கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் அதிபராக பதவியேற்றுகொண்டுள்ளார்.

அதிபராக பதவியேற்ற பின் உரையாற்றுகையில், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கபடலாம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்க டொலருக்கு மாற்றாக வேறு பணத்தை பயன்படுத்த பிரிக்ஸ் அமைப்பு ஆலோசித்தது. இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை கொண்ட அமைப்பு பிரிக்ஸ் ஆகும்.

இதேவேளை,

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் வரிகளை விதிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிகித வரி விதிப்பது குறித்து தனது நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply