பிரித்தானியாவின் தேர்தல் ஆணையம் மீது இணைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் கட்டுப்பாட்டு அமைப்புகள், மற்றும் தேர்தல் பதிவேடுகளின் நகல்கள் அணுகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2014 மற்றும் 2022 ஆண்டுக்கு இடையில் வாக்களிக்க பதிவு செய்தவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வெளிப்புற பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு மையத்துடன், பணியாற்றியுள்ளதாக பிரித்தானிய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.