பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்!

You are currently viewing பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தற்போதைய வெளியுறவு லிஸ் ட்ரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைத்துவத்துக்காக தன்னுடன் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக்கை தோற்கடித்து அவர் வெற்றிபெற்றுள்ளார். பிரித்தானியாவின் ஆளும்கட்சியில் கடந்த ஏழு வாரகாலமாக இடம்பெற்ற இந்த தலைமைத்துபோட்டியின் முடிவை வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ஒரு மாநாட்டு மையத்தில் வைத்து கென்சவேட்டிவ் கட்சியின் தலைவர் சேர் கிறகம் பிராடி அறிவித்தபோது லிஸ் ட்ரஸின் ஆதரவாளர்கள் கரவொலியை எழுப்பி ஆரவாரம் செய்திருந்தனர்.

கென்சவேட்டிவ்கட்சி உறுப்பினர்கள் அளித்த 82.6 வீத வாக்குப்பதிவில் கிட்டிய வாக்குகளில் லிஸ் ட்ரசுக்கு 81,326 வாக்குகள் கிட்டியிருந்தன. அவரை எதிர்த்துப்போட்டியிட்ட ரிஷி சுனக்குக்கு 60,399 வாக்குகள் கிட்டியிருந்தன.

இந்த அறிவிப்பின் பின்னர் கென்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்ட வெற்றியாளரான லிஸ் ட்ரஸ் தனது உரையை வழங்கிய போது பிரித்தானியாவில் உயரும் எரிசக்தி செலவுகளை சமாளிக்க ஒரு திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நாளை ராணி எலிசபெத்தை ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையில் சந்தித்து தனது பதவிவிலகல் கடிதத்தை வழங்குவார். அதன் பின்னர் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் ராணியின் நியமனத்திற்குப் பின்னர் பிரதமாராக பதவியேற்பார்.

பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் போட்டியிடும் நிலையில் அதில் யார் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் என்பது இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரியவருகிறது.

பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகியிருந்தார்.

இதனை தொடர்ந்து, பிரித்தானிய வழக்கப்படி அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவரது இடத்தில் பிரதமராக பொறுப்பேற்க ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிரதமர் பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினரின் ஆதரவைப் பெற்று தற்போது பிரித்தானிய வெளியுறவுச் செயலரான லிஸ் ட்ரஸ் மற்றும் முன்னாள் சேன்சலரான ரிஷி சுனக் ஆகியோர் போட்டியின் கடைசி இரு வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

அவர்களில் ஒருவர் இன்று பிரித்தானியாவின் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply