பிரித்தானியாவில் சிறுமி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக, சகோதரனே அடித்துக்கொன்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்தும் குடும்பத்தால் வழக்கில் இருந்து தப்பவைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மான்செஸ்டர் அருகே 11 வயதேயான பாடசாலை சிறுமி ஃபலாக் பாபர் என்பவர் குடியிருப்பில் சுருண்டு விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 3 வாரங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த விவகாரத்தில், சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் சுஹைல் முகமது மீது அதிகாரிகள் கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
சிறுமி ஃபலாக்கின் மரணம் சிக்கலான மருத்துவ காரணங்களால் நிகழ்ந்தது என்றே கூறப்பட்டது. சம்பவத்தன்று தமது இரு இளைய சகோதார்களுடன் குளியலறையில் இருந்துள்ளார் ஃபலாக்.
அப்போது முகமது உள்ளே நுழைய முயன்றுள்ளார். கொஞ்சம் பலமாகவே கதவை தள்ளித் திறந்ததாக கூறும் முகமது, அப்போது தலையில் காயங்களுடன் அலறியபடி ஃபலாக் சுருண்டு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கதவு திறக்காததால் தாம் பலகொண்டு திறக்க முயன்றதில், அதன் ஒருபக்கம் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், முகமது தமது காதலிக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர், தாம் ஃபலாக்கை கொலை செய்துள்ளதாகவும், அவளின் தலையில் தாம் குத்துவிட்டதாகவும், ஆனால் என்ன நடந்தது என்பது தமக்கு நினைவில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஃபலாக் அலறியபடி சுருண்டு விழுந்ததாகவும், சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முகமது தமது காதலிக்கு அனுப்பிய குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது தொடர்பில் அளித்த வாக்குமூலத்தில், குளியலறை கதவினை திறந்து பார்த்த போது ஃபலாக் தரையில் விழுந்து கிடந்துள்ளார் என்றும், தாம் உதவ முன்வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, குளியலறை கதவானது திறக்க முடியாமல் சிக்கிக்கொள்ள, தாம் பலத்துடன் தள்ளியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 999 இலக்கத்திற்கு தொடர்புகொண்ட முகமது, தமது சகோதரி தடுமாறி விழுந்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
அந்த உரையாடலை ஆய்வு செய்த அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்களை கடவுளிடம் வேண்டுங்கள் என முகமது கூறுவதும் பதிவாகியிருந்தது. அத்துடன், யாருக்கும் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டாம், யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் முகமது தமது குடும்ப உறுப்பினர்களிடம் கூறுவதும் அந்த அலைபேசி அழைப்பில் பதிவாகியிருந்தது.
2022 பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்தனர். மார்ச் 18ம் திகதி ஃபலாக் மரணமடைந்த நிலையில் முக்மது கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையில் அவர் ஒரு வார்த்தை கூட பதிலளிக்கவில்லை.
சம்பவத்தின் போது ஃபலாக்குடன் இருந்த இரு இளைய சகோதரர்களும் குடும்பத்தினரின் கட்டாயம் காரணமாக பொலிசாரிடம் பேச மறுத்துள்ளனர். இந்த நிலையில், ஃபலாக்கின் பாட்டியார் பொலிசாரிடம் தெரிவிக்கையில், கதவில் அல்லது ஃபலாக்கின் தலையில் முகமது குத்துவிட்டிருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தமக்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் நினைவில் இல்லை என தெரிவித்துள்ளார். 2022 மார்ச் 18ம் திகதி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுமி ஃபலாக் மரணமடைந்திருந்தார்.