பிரித்தானியாவின் டோவர் பகுதியில் சுமார் 10,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாரவூர்தி ஓட்டுகனர்கள், பண்டிகை தினத்திற்கு கூட வீடு செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள். இன் நிலையில் ராம்ஸ்-கேட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்கள், சோறு ,சிக்கன் பொரியலோடு உணவுப் போட்டலங்கள் தயார் செய்து. அவற்றை தவிக்கும் ஓட்டுனர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்பார்கள். கடும் குளிரில் லாரியில் படுத்து உறங்கிக் கொண்டு. நல்ல உணவு இல்லாமல் தவித்த பல நூறு ஓட்டுனர்களுக்கு தம்மால் ஆன உதவியை கிரி (ராம்ஸ்கேட் கிரி) என்னும் ஈழத் தமிழ் தொழில் அதிபர் வழங்கியுள்ளார்.
பிரித்தானியாவில் அரசியல் என்றாலும் சரி, பொது நல உதவிகள் என்றாலும் சரி, அதில் ஈழத் தமிழர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது.அந்த வகையில் கிரி என்ற தொழில் அதிபர் செய்துள்ள இந்த தொண்டு தமிழர்களை பிரித்தானியாவில் மீண்டும் ஒரு முறை தலை நிமிர வைத்துள்ளது என்று தான் கூறவேண்டும்.


