மண்ணின் மைந்தனை மாவீரனாக்கி வீரம் வளர்த்த பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.
மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஹரோ மற்றும் வலிங்டன் எனும் இடங்களிலும் 24.11.2024 மாலை நடைபெற்றது.
நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்கு பிராந்திய மகளிர் செயற்பாட்டாளர் கலையழகி அவர்கள் பொது சுடரினை ஏற்றி வைக்க நிகழ்வானது ஆரம்பமானது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்கு பிராந்திய மாவீரர் பணிமனைப் பொறுப்பாளரும் ,லெப்டின்ற் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரருமான திரு .கமல் அவர்கள் தமிழீழ தேசிய கொடி ஏற்றி வைத்தார்கள்.
ஈகைச்சுடரினை ஈகைப்போரொளி மாவீரர் சிரஞ்சீவி மாவீரர் சோதி கப்டன் நெடுமாறன் ஆகியோருடைய சகோதரன் வைத்திய லிங்கம் சிவயோகனாதன் அவர்கள் ஏற்றிவைத்தைதை தொடர்ந்து அகவணக்கம், தொடர்ந்த்து கல்லறைகான மலர்மாலையினை ஈகைப்பேரோளி முருகதாஷ் அவர்களின் தாயார் அவர்கள் அணிவித்ததை தொடர்ந்து பொது மக்களும் வணக்கம் செலுத்தினார்கள்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தென்மேற்குபிராந்திய மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு மகளிர் பொறுப்பாளர் திருமதி தேவராஜா. தேவதர்ஷினி பொது சுடரினை ஏற்றி வைக்க நிகழ்வானது ஆரம்பமானது. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நீண்டகால தேசிய பணியாளர் திரு கருணானிதி கனகரத்தினம் அவர்கள் அவர்கள் தமிழீழ தேசிய கொடி ஏற்றி வைத்தார்கள்.
ஈகைச்சுடரினை லெப்டினன் காண்டீபன் அவர்களின் சகோதரி திருமதி பரமேஷ்வரி அவர்கள் ஏற்றிவைத்தைதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது . கல்லறை நடுகல்களுக்கான மலர்மாலையினை 2ம் லெப்டினன் இசைவாணனின் மருமகள் திருமதி குமார் அஜந்தா, மேஜர் மாதங்கி அவர்களின் சகோதரி திருமதி அனுசியா மற்றும் வீரவேங்கை லிங்கேஷ் அவர்களின் மருமகள் திருமதி நைத்திரா உதயகுமார் அவர்களும் அணிவித்தார்கள்











