பிரித்தானியாவில் நிர்வாணமாக போராடும் பேராசிரியர்!

You are currently viewing பிரித்தானியாவில் நிர்வாணமாக போராடும் பேராசிரியர்!

பிரித்தானியாவில் பெண் உரிமைகளை முன்வைத்து பல்கலைக்கழக பேராசிரியர் விக்டோரியா பேட்மேன் நிர்வாண போராட்டங்களை நடத்தி வருகிறார். பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணி புரிந்து வரும் விக்டோரியா பேட்மேன் ஆடை இல்லாமல் நிர்வாணமாக பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

பிரித்தானியா மற்றும் வேல்ஸின் பொது வெளியில் நிர்வாணமாக இருப்பது குற்றமல்ல. ஆனால் ஆடை இல்லாமல் போராட்டம் செய்வது சர்ச்சையான ஒன்று.

அந்த வகையில், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மறுக்கப்படுவது, பெண்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் பெண்கள் மீதான பிரெக்ஸிட்டின் விளைவு ஆகிய பல்வேறு போராட்டங்களை விக்டோரியா பேட்மேன் நடத்தியுள்ளார்.

தனது போராட்ட முறை குறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விக்டோரியா பேட்மேன், எனது நோக்கம் இயல்பு நிலைக்கு இடையூறு ஏற்படுத்துவது இல்லை, அனைவரது கவனத்தையும் பிரச்சனைகள் மீது ஈர்ப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார்.

என்னுடைய ஆடையில்லாத இத்தகைய போராட்டத்தின் போது மக்கள் என்னை விமர்சித்தாலும், போராட்டத்திற்கான காரணத்தை குறித்து மக்கள் நன்கு விவாதிக்க தொடங்குகிறார்கள் என்று பேட்மேன் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு வரையறை சொல்வது, பெண்களை ஒடுக்கி வைப்பதற்காக தான். பெண்ணின் மானத்தை கொண்டு அவளை தீர்மானிப்பது அவளை அவமரியாதை செய்வதாகும்.

எனவே அதை உடைக்க என்னுடைய போராட்டத்தை முன்வைத்து வருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த வரையறையும் இல்லாமல் அனைத்து பெண்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றும் விக்டோரியா பேட்மேன் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply