பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் இரவு வீட்டுக்கு நடந்து சென்ற பெண் சட்டத்தரணி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டனில் இல்ஃபோர்ட் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் கடந்த ஞாயிறு அதிகாலையில் நடந்துள்ளது. 35 வயதான ஸாரா அலீனா என்பவர் சம்பவத்தன்று நடந்தே தமது குடியிருப்புக்கு சென்றுள்ளார்
வாடகை டாக்ஸியில் பயணப்பட பயப்பட்ட அவர், நண்பர்களிடம் கூறிவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார், அதுவே பாதுகாப்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், Jordan McSweeney என்ற இளைஞரால் கொடூரமாக தாக்கப்பட்டு குற்றுயிரான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸாரா பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
மட்டுமின்றி ஸாராவின் மொபைல், கைப்பை, சாவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு சென்றதுடன், துஸ்பிரயோகத்திற்கும் முயற்சித்துள்ளார்.
ஆண்டு பிறந்த பின்னர் லண்டனில் கொல்லப்படும் 16வது பெண் எனவும் பிரித்தானியா முழுக்க 52வது பெண் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.