பிரித்தானியாவில் 14 வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு பள்ளிச் சிறுமிகள் மெக்டொனால்டு-க்கு வெளியே பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ளனர். பிரித்தானியாவின் நியூனேட்டன்(Nuneaton) பகுதியில் சனிக்கிழமை மாலை 14 வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மெக்டொனால்டு-க்கு வெளியே மர்ம நபர்களால் அணுகப்பட்ட பிறகு, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் ரிவர்ஸ்லி பூங்காவில் (Riversley Park) இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தேக நபர் ஒருவரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், மற்றொரு சிறுமி ஜூபிலி பூங்காவில்(Jubilee Park) இரண்டாவது நபரால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் டவுன் சென்டரின் குயின்ஸ் சாலையில் உள்ள மெக்டொனால்டு-க்கு வெளியே நடந்து சென்றதாக நம்புகிறோம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமிகள் மீது பாலியல் அத்துமீறல்களை நடத்திய நபர்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர், அதில் முதல் நபர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம், ஒல்லியான உடல், வெள்ளை நிறம், நேரான கருப்பு முடி, ஆனால் முழுமையான தாடி இல்லை என விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கருப்பு நிற உடை, தொப்பி மற்றும் வைரம் பதித்த காதணிகளை அணிந்து இருந்ததாகவும் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது நபர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம், ஒல்லியான உடல்வாகு, வெளிர் நிற தோல், கருப்பு சுருள் முடியுடன், கருப்பு பிபா கோட், கருப்பு நிற அடிடாஸ் டிராக்சூட் ஆகியவற்றை அணிந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பயங்கரம் பாதிக்கப்பட்ட இருவருக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகிறார்கள் என டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பால் சார்டோரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சம்பவங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை நிறுவ முழு விசாரணையை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது மேற்கூறிய விவரங்களுக்கு பொருத்தமான இரண்டு ஆண்களை பார்த்தவர்கள் தயவுசெய்து பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தகவல் உள்ள எவரும் online ல் புகார் அளிக்கலாம், மேலும் 101 அல்லது 0800 555 111 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அளிக்கலாம்.