பிரித்தானியாவில் மிக சிறப்பாக நடைபெற்ற மாபெரும் தமிழர் விளையாட்டு விழா – 2023
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் 28.05.2023 காலை 9 மணிக்கு Rounsdhaw playing field Hannibal way Croydon ல் ஆரம்பமானது .

பொதுச்சுடரினை Stoch on Rent பிராந்தியப் பொறுப்பாளர் திரு. வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

பிரித்தானிய தேசியக்கொடியினை தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி பாபரா இராஜன் அவர்களும்
தமிழீழத் தேசியக் கொடியினை அரசியற்துறை செயற்பாட்டாளர் திரு. செல்வா அவர்களும் ஏற்றிவைத்தார்கள்.
ஈகைச்சுடரினை மாவீரர் சுடர்ணன் அவர்களின் தாயார் திருமதி செல்லம் கருணானந்தம் ஏற்றிவைத்தார்.அகவணக்கம் மற்றும் மலர் வணக்கத்தினை தொடர்ந்து விளையாட்டு விழாவினை
மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் அசோகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

































