பிரித்தானியாவில் லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 (GMT) மணியளவில் கார் குண்டு வெடிப்பு இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், வாகன ஓட்டுநர் காயமடைந்துள்ளதாக காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 29, 26 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.