பிரித்தானிய பிரதமராக “ரிஷி சுனக்”!

You are currently viewing பிரித்தானிய பிரதமராக “ரிஷி சுனக்”!

இந்திய / பாகிஸ்தானிய வம்சாவளியை சேர்ந்த, மிகப்பெரும் பணக்காரரான “ரிஷி சுனக்”, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரித்தானிய பிரதமர் “போரிஸ் ஜோன்சன்” அவர்களுடைய அரசில், நிதியமைச்சராக பொறுப்பு வகித்த “ரிஷி சுனக்”, “போரிஸ் ஜோன்சன்” அரசியல் நெருக்குவாரங்களுக்குள் சிக்குண்டிருந்த ஏக காலத்தில், தனது நிதியமைச்சர் பதவியிலிருந்து விககியமை, “போரிஸ் ஜோன்சன்” பிரதமர் பதவியிலிருந்து விலகுவதை துரிதப்படுத்தியிருந்தமை நினைவிருக்கலாம். தொடர்ந்து வந்த பிரதமர் தேர்தலில் பிரதமராக போட்டியிட்ட “ரிஷி சுனக்” தேர்தலில் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“போரிஸ் ஜோன்சன்” அவர்களை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்த “Liz Truss” அம்மையாரும் பதவியேற்ற வெறும் 45 நாட்களில் இப்போது பதவி விலகும் நிலையில், மிகக்கடுமையான அரசியல் குழப்பநிலைக்கு சென்றிருக்கும் பிரித்தானியா, மீண்டும் புதிய பிரதமரை தேடும் நிலையில், பழமைவாத கட்சியை சேர்ந்த “ரிஷி சுனக்”, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேரின் ஆதரவை பெற்றிருப்பதால், அதே கட்சியிலிருந்து போட்டியிட்ட மற்றைய போட்டியாளர் போட்டியிலிருந்து விலக்கியதையடுத்து, “ரிஷி சுனக்”, பிரித்தானியாவின் முதலாவது வெள்ளையரல்லாத பிரதமர் என்ற வரலாற்றுப்பதிவையும் பெறுகிறார்.

42 வயதாகும் அவர், தத்துவம், அரசியல் மற்றும் வங்கி / பொருளாதாரம் போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவர். மிகப்பெரும் பணக்காரராக அறியப்படும் “ரிஷி சுனக்” மற்றும் அவரது மனைவி ஆகியோர், தமது தனிப்பட்ட வர்த்தகங்களை பிரித்தானியாவுக்கு வெளியிலேயே வைத்திருப்பதால், பிரித்தானியாவுக்கு செலுத்தவேண்டிய வரிகளை முறையாக செலுத்தவில்லையென விமர்சனங்களும் முன்னதாக எழுந்திருந்த நிலையில், பிரதமராக “ரிஷி சுனக்” பதவியேற்ற பின்னர் அவரை சுற்றிய சர்ச்சைகள் மீண்டும் பூதாகரமாக விவாதிக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

2 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments