பிரித்தானியாவில் பாலஸ்தீனிய சார்பு ஆதரவாளர்கள் பர்மிங்காம் நியூ ஸ்ட்ரீட் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் நிலையத்தில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர், கூட்ட நெரிசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதேபோல் பர்மிங்காம் நியூ ஸ்ட்ரீட் நிலையத்திலும் பாலஸ்தீனிய சார்பு ஆதரவாளர்கள் உள்ளிருப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் அனைவரும் ‘ரிஷி சுனக், கெய்ர் ஸ்டர்மர் உங்களை நினைத்து வெட்கப்படுகிறோம்’ என்று கோபமாக கூச்சலிட்டனர்.
மேலும் ‘பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் வேண்டும்’ மற்றும் ‘போர் நிறுத்தம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், ஏந்தியபடி பலர் இருந்தனர்.
அவர்களில் நூற்றுக்கணக்கானோர் ‘எங்களுக்கு போர் நிறுத்தம் வேண்டும். எப்போது நமக்கு அது தேவை? இப்போது’ என கோஷமிட்டனர்.
எனினும் பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார், இந்த ஆர்பாட்டத்தினால் ரயில்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்பதை பயணிகளுக்கு உறுதி செய்தனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியிருந்ததாக் இதனை ஏற்பாடு செய்த Sisters Uncut ஆதரவுக்குழு தெரிவித்தது.