பிருத்தானியாவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 33,998 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 23 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 236,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.