உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 7,389,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 415,823 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான பிருத்தானியாவையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 245 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 41,128 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 1,003 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சுமார் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 290,143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இங்கிலாந்து 4வது இடத்தில் உள்ளது.