தமிழ் மக்களுக்காக தம்மை அகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களுக்கு தமிழ் மக்கள் கண்ணீருடன் நினைவு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த சம காலத்தில், பிரித்தானியாவில் தமிழின விரோதிகள் சிலருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் உறவாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு காரணமாக இருந்தவரும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தவரும், பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து வருபவருமான ஜெயதேவன், ஈ.என்.டி.எல்.எப் முக்கியஸ்தரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா பரப்புரை ஊடகமான ரீ.பி.சி. வானொலியின் பணிப்பாளரும், போதைப்பொருள் கடத்தல் செய்து சிறை சென்றவருமான ராமராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தரும், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தூதரகத்தால் பயன்படுத்தப்படுபவருமான தம்பியா(தம்பா) போன்றோருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் பேச்சுவாரத்தை நடாத்தியிருந்தார்கள்.
இதுபோன்ற தமிழ் தேசிய விரோதிகளுடன் சுமந்திரன் பேச்சுவார்த்தை நடாத்தியது மாத்திரமல்ல, விருந்து களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு பிரித்தானியாவில் உள்ள ரட்ணசிங்கம் அவர்களின் இல்லத்தில் வைத்து பிரித்தானிய வாழ் சிங்கள கடும்போக்கு அமைப்பான அமல் குழுவினருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இணைவழி கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ரட்ணசிங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிருத்தானியா அரசிற்கு சிறீலங்காவில் இனப்பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும் சுமத்திரன் கயிறு விட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.