மேற்கிந்திய தீவுகள் அணி பிருத்தானியா சென்றடைந்துள்ள நிலையில் சர்வதேச துடுப்பாட்ட போட்டியில் இது மிகப்பெரிய முன்னேற்றம் என்று அந்நாட்டு அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டல் (Jason Holder) தெரிவித்துள்ளார். பிருத்தானியா அணியுடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள் அணி சென்றடைந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச துடுப்பாட்ட போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளடைப்பு காரணமாக மற்ற நாடுகளுக்கு துடுப்பாட்ட அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக துடுப்பாட்டத்தில் புதிய நடைமுறைகளை ICC கொண்டுவந்துள்ளது. துடுப்பாட்ட பந்தில் எச்சில் பயன்படுத்த தடை, மற்ற நாட்டு வீரர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் ஜூலை 8-ம் திகதி பிருத்தானியா அணிக்கு எதிரான 3 தொடர் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் பிருத்தானியாவை சென்றடைந்த பின்னர் முதற்கட்டமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். பின்னர் வழக்கம் போல் அவர்கள் பயிற்சியை தொடங்க உள்ளனர்.
இதனிடையே பிருத்தானியா அணி தலைவர் ஜோ ரூட் (Joe Root) மீண்டும் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடுவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு பின் சுமார் 2 மாதங்களுக்கு பின் நடைபெற உள்ள துடுப்பாட்ட நேரலை போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.