பிரேசிலில் கொடூர விபத்து! 32 பேர் வரை பலி!

You are currently viewing பிரேசிலில் கொடூர விபத்து! 32 பேர் வரை பலி!

பிரேசிலின்(Brazil) மினாஸ் ஜெரைஸ்(Minas Gerais) மாகாணத்தில் பேருந்து, பார ஊர்தி மற்றும் கார் ஆகிய வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் குறைந்தது 32 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்றையதினம்(21.12.2024) லாஜின்ஹா (Lajinha) என்ற நகரில் ஏற்பட்டுள்ளது.

வாகனங்களின் மோதலின் விளைவாக அந்த இடத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு குழந்தை உட்பட 32 பேர் வரை பலியாகியுள்ளதோடு, 13 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், விபத்துக்குள்ளான பேருந்தில் 45 பயணிகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply