கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,039 பேர் இறந்துள்ளனர். வைரஸின் விரைவான பரவலுக்குப் பின்னர் தென் அமெரிக்க நாட்டில் தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியது வாரத்தில் இது நான்காவது முறையாகும்.
பிரேசில் வைரஸின் புதிய மையமாக மாறியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, பிரேசிலில் இறப்பு எண்ணிக்கை 24,512 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இறப்பு எண்ணிக்கை அநேகமாக அதிகமாக இருக்கலாம், ஆனால் சோதனை குறைபாடு காரணமாக, பல பாதிப்புகள் கவனிக்கப்படாமல் போகின்றன.
பிரேசில் நாட்டின் 21 கோடி மக்கள் தொகையில் 3,91,222 தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது. பிரேசில் அமெரிக்காவை அடுத்து பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது.