கடந்த வார இறுதியில், பிரேசில் அதிகாரிகள் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதை நிறுத்த முயன்ற பின்னர், உள்ளூர் பத்திரிகைகள் ஒன்றிணைந்து புள்ளிவிவரங்களை சேகரிக்க ஒரு தனித்துவமான ஒத்துழைப்புடன் முன்வந்துள்ளன.
ஆகவே.., ஒன்றிணைந்த முயற்சியின் காரணத்தால், புதன்கிழமை இறப்பு எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது என்பதையும், ஒரே நாளில் 30,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிய முடிந்துள்ளது என்று globo.com. எழுதியுள்ளது.
- செவ்வாய்க்கிழமை இரவு 38,497 இறப்புகளிலிருந்து புதன்கிழமை 39,797 ஆக (1300 புதியது) உயர்ந்தது.
- செவ்வாய்க்கிழமை மாலை 742,084 நோய்த்தொற்று பாதிப்புகளில் இருந்து புதன்கிழமை 775,184 வரை (புதியது 33,100) உயர்ந்தது.
பிரேசில் அதிகாரிகள் எண்களை வெளியிடுவதை நிறுத்திய சில நாட்களுக்குப் பின்பு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர்கள் மீண்டும் எண்ணிக்கையை வெளியிடுவதை தொடங்க வேண்டியிருந்தது.
பிரேசில் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ தகவலில், பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 772,416 என்றும் இறப்பு எண்ணிக்கை 39,680 என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.