பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஈரான் ஜனாதிபதி!

You are currently viewing பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஈரான் ஜனாதிபதி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மஷாத் நகரில் தகனம் செய்யப்பட்டது. இப்ராஹிம் ரைசி பிறந்த அதே மஷாத் நகரத்தில், சமன் அல்-ஹஜ்ஜாஜ் அலி பின் மூசா அல்-ராஜாவின் ஷெரீஃப் ஆலயத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். ரைசியின் இறுதிப் பயணத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு சுமார் 30 லட்சம் பேர் கலந்துகொண்டனர். அவர்களது கையில் ஈரானின் கொடியும், ரைசியின் படங்களும் இருந்தன.

உலகெங்கிலும் உள்ள சுமார் 68 நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ரைசிக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இடம்பெற்றுள்ளார். மேலும், கத்தாரின் எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சுடானி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஈரான் சென்றடைந்தனர்.

தலிபான் துணைப் பிரதமர் முல்லா பரதார், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளும் ரைசிக்கு பிரியாவிடை அளிக்க வந்திருந்தனர்.

ஈரானின் உச்ச தலைவர் Seyyed Ali Hosseini Khamenei தெஹ்ரானில் ஜனாதிபதி ரைசிக்கு தனது கடைசி பிரியாவிடையை வழங்கினார்.

முன்னதாக புதன்கிழமை, இப்ராஹிம் ரைசி மற்றும் பிற அதிகாரிகளின் இறுதிச் சடங்குகள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தலைமையில் தொடங்கியது. அவர் ரைசிக்காக பிரார்த்தனை செய்தார்.

இதனைக் காண நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தெஹ்ரானை அடைந்தனர். ஊர்வலத்தில் ஈரான் நாட்டு பிரஜைகள் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, இறந்தவர்களின் சவப்பெட்டிகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டன. இந்த சவப்பெட்டிகள் ஈரானிய கொடியில் சுற்றப்பட்டிருந்தன. இவற்றில் இறந்தவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments