பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு !

You are currently viewing பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு !

பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டின் லூசான் நகரத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (30) எற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீற்றர் ஆழம் வரை சென்றதாக ஜேர்மன் புவி அறிவியல் மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு மையம் மேலும் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த 21.12.2024 அன்று நேபாளத்தில் (Nepal) 4.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply