புகைத்தலால் ஏற்படும் விளைவுகள் கனடா புதிய நடவடிக்கை!

You are currently viewing புகைத்தலால் ஏற்படும் விளைவுகள் கனடா புதிய நடவடிக்கை!

உலகளவில் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை அறிவுறுத்தும் வகையில் கனடா அரசாங்கம் புதிய நடைமுறையை கைக்கொண்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு சிகரெட்டிலும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை அச்சடிக்கும் முடிவை கனடா அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்த நடைமுறை கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

‘ஒவ்வொரு சிகரெட்லும் விஷம்’, ‘சிகரெட் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது’, ‘சிகரெட் புற்றுநோயை ஏற்படுத்தும்’, ‘சிகரெட் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்’, ‘சிகரெட் உங்கள் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தும்’ போன்ற வாசகங்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் கனடாவில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது கிங் சைஸ் சிகரெட்டில் இந்த வாசகங்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply