“புடினை நாங்கள் தாக்கவில்லை” – ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விளக்கம்!

You are currently viewing “புடினை நாங்கள் தாக்கவில்லை” – ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விளக்கம்!

ரஷ்ய ஜனாதிபதி புடினை நாங்கள் தாக்கவில்லை என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செய்தியாளர்கள் மாநாட்டில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் 14 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிவைத்து அவரது மாளிகை மீது ட்ரோன் விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஷ்ய ஜனாதிபதி புடினை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த ட்ரோன்கள் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது, மேலும் கிரெம்ளின் மீதான தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன், கிரெம்ளின் மீதான ஆளில்லா விமான தாக்குதலுக்கு பிறகு, ஜெலென்ஸ்கி மற்றும் அவரது குழுவை உக்ரைனில் இருந்து அகற்றுவதை தவிர ரஷ்யாவிற்கு வேறு வழியில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தாக்குதலின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாளிகையில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “நாங்கள் ரஷ்ய ஜனாதிபதி புடினையோ அல்லது மாஸ்கோவையோ தாக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் “நாங்கள் எங்கள் பிரதேசத்தில் போராடுகிறோம், நாங்கள் எங்கள் கிராமங்களையும் நகரங்களையும் பாதுகாக்கிறோம்” என குறிப்பிட்டு பேசினார்.

அப்போது மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைனை குற்றம்சாட்டுவது குறித்து கேட்டதற்கு, புடினுக்கு தற்போது வெற்றிகள் என்று எதுவும் இல்லை, எனவே தங்கள் மக்களை ஊக்குவிப்பதற்கு அவருக்கு வழி ஒன்று தேவை என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments