கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த ஆடைத் தொழிற்சாலையை தற்போதைக்கு திறக்கவேண்டாம் என்று குரல் கொடுத்த பெண்கள் ஆறு பேர் உட்பட்ட பத்துப் பேர் புதுக்குடியிருப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை இன்று காலை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 5.45மணியளவில் புதுக்குடியிருப்பின் பெண்கள் அமைப்புக்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர் ஜனமயந் உட்பட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு சென்ற சிறீலங்கா காவல்த்துறைனர் முதலில் ஆறு பேரை கைது செய்திருந்தனர்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் புதுக்குடியிருப்பு பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஆறு பேர், பிரதேச சபை உறுப்பினர் ஜனமயந் உட்பட்ட 10 பேர் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்..
இதேவேளை தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் இன்னமும் கைதுகள் இடம்பெறலாம் என்று அஞ்சப்படுகிறது