புத்தாண்டை முன்னிட்டு ஜேர்மனியில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

You are currently viewing புத்தாண்டை முன்னிட்டு ஜேர்மனியில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

ஜேர்மனியில் பல மாநில அரசாகங்கள் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. ஒமிக்ரான் மாறுபாடு பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்த அவசர திட்டத்தின் கீழ், திங்கட்கிழமை முதல் சில மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன.

திங்கட்கிழமை முதல் Baden-Württemberg, Lower Saxony, Brandenburg and Mecklenburg-Western Pomerania மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன, மற்ற மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்துப்படும்.

சினிமாக்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு மையங்கள் உட்பட பல பொது இடங்களை மூட Mecklenburg-Western Pomerania மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

Brandenburg-ல் தனியார் உட்புற அல்லது வெளிப்புற சந்திப்புகளில் 10 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி, அதுவும் தடுப்பூசி போட்ட அல்லது தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

திங்கட்கிழமை அறிமுகமாகும் இந்த கட்டுப்பாடு 2022 ஜனவரி 11ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

வீட்டில் யாரேனும் தடுப்பூசி போடாமல் இருந்தால், தற்போது அமுலில் உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும்.

அதாவது, மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் வரை மட்டுமே தனிப்பட்ட சந்திப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள், மேலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டுப்பாடு ஏதுமில்லை.

Lower Saxony-யும், தனியார் உட்புற அல்லது வெளிப்புற சந்திப்புகளில் 10 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி, அதுவும் தடுப்பூசி போட்ட அல்லது தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். குழந்தைகளுக்கு கட்டுப்பாடு ஏதுமில்லை.

Baden-Württemberg-ல், திங்கட்கிழமை மதல் இரவு 10:30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கேட்டரிங் துறைக்கு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், புத்தாண்டு தினத்தன்று மட்டும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு இருக்கும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply