புத்த பெருமான் வந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது – செல்வராசா கஜேந்திரன்.

You are currently viewing புத்த பெருமான் வந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது – செல்வராசா கஜேந்திரன்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீது பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே கஜேந்திரன் எம்.பி  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தனது உரையில் வாக்களித்த மக்களுக்கு 

மட்டுமின்றி வாக்களிக்காத மக்களுக்கும் பொறுப்புக் கூறும் கடமை தமக்கு உண்டு என்று குறிப்பிட்டிருந்தார். அக்கருத்து அவருக்கு வாக்களித்த சிங்கள மக்கள் பற்றியதா? அல்லது வாக்களிக்காத சிங்கள மக்களை பற்றியதா? அல்லது அவருக்கு வாக்களிக்காத தமிழ்த் தேசிய மக்களையும் சேர்த்துதான் கூறினாரா? என்ற கேள்விகள் உள்ளன. ஆனால் நடவடிக்கைகளை

நோக்கும் போது தமிழ் மக்களை அவர் முற்றாக புறக்கணித்துள்ளார் என்பதனை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து எதனையும் கூறவில்லை . அவர்களுக்கு வெறும் பொருளாதார பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகளே இருப்பதாக கூறி திசை திருப்பும் வகையில் அவரின் உரை அமைந்துள்ளது. இந்த இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரையில் கோட்டாபய ராஜபக்சவோ, புத்தப்பெருமான் வந்தாலும்கூட இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்ப தனை கூறிக்கொள்கின்றேன். உங்களுக்கு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலேயே இருக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வாருங்கள். தீர்வென்பது தமிழ் மக்கள் விரும்பும் வகையில் அமைய வேண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply