அன்பார்ந்த தமிழ் மக்களே மாவீரர்களின் தியாகங்கள் நினைவு கூறப்படுகின்ற நவம்பர் மாதத்தில் ஈழத்தில் தமிழ் தேசத்தினது எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கின்ற பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது
இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மாவீரர்கள் மற்றும் போராளிகளின் தியாகங்களை மனதில் வைத்து சரியான தரப்பான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பெருவாரியான வாக்குகளை வழங்கி வடகிழக்கு தமிழீழத் தாயகத்தின் தலைமை சக்தியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அங்கீகரிக்க வேண்டும்
குறைந்தபட்சம் வடகிழக்கு தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 10 ஆசனங்கள் கிடைக்க வேண்டும் அப்பொழுதுதான் எதிர்காலத்தில் தமிழினத்தை அழிவிலிருந்து காப்பாற்றலாம் தமிழீழத்தில் பேரினவாத சிங்கள அரசு நடந்த தமிழினஅழிப்பு தொடர்பில் விசாரணை வாயிலாக நீதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்
இலங்கையிலே தமிழ் மக்களினுடைய எதிர்கால இருப்பை நிலை நிறுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கலாம்
ஆகவே தமிழ் மக்கள் இந்த பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்காக மாவீரர்களின் தியாகங்களை மனதில் வைத்து இந்த புனிதமான மாதத்தில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.