புனித பூமி என்ற பேரில் அனுரா அரசின் அடக்குமுறை ஆரம்பம்!

You are currently viewing புனித பூமி என்ற பேரில்  அனுரா அரசின் அடக்குமுறை ஆரம்பம்!

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் உள்ள பொன்மலைக்குடா பகுதியில் உள்ள மையவாடியில் ஜனாசாவை அடக்கம் செய்ய முற்பட்ட போது புனித பூமி என்ற போர்வையில் சிறீலங்கா பொலிஸார் நேற்று (12) தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் அமைதியின்மை ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணி அரிசி மலை பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள புனித பூமி என விகாராதிபதி தெரிவித்ததை அடுத்தே சிறீலங்கா பொலிஸார் அங்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் உரிய தரப்புக்களுடன் அரச உயரதிகாரிகள் உடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின் குறித்த ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தவிர அண்மையில் திரியாய் கிராம சேவகர் பிரிவில் உள்ள வலத்தாமலை விவசாய பகுதியில் தங்களது விவசாய நிலங்களை இயந்திரம் மூலமாக உழுத போது தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய தொல்பொருட்களை சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த பகுதி விவசாய நிலம் மக்களுக்கு சொந்தமான போதும் விவசாயம் செய்ய விடாது அப்பகுதி விகாராதிபதி தடுத்து நிறுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விகாராதிபதி புனித பூமி என கூறி அப்பகுதியில் கட்டிடம், விகாரை என அமைத்து வாழ்ந்து வருவதாகவும் 82 ஏக்கர் அளவில் விவசாய நெற்செய்கைக்கான மக்கள் காணிகளை குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடர் போராட்டம் ஊடாக மக்கள் தங்களது உரிமைகளுக்காக பாடுபடுகின்ற போதும் நிரந்தர தீர்வு இல்லை என தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments