புயல்காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உதவி வழங்கிவைப்பு!
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 30.08.2020 அன்று வீசிய கடும் காற்று மழையினால் 11 குடும்பங்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்காலிக வீடு ஒன்று முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன் ஒட்டு வீடுகளில் கூரைகள்,ஓடுகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளன.வீடுகளில் ஏற்பட்ட சேதம்விபரங்கள் கிராமசேவகர் ஊடாக அனர்த்த முகாமைத்து நிலையத்தினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இழப்பீட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவையினரால் உதவித்தொகைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமைமகள்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.