புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – மிரட்டும் சீனா !

You are currently viewing புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – மிரட்டும் சீனா !

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி முதல் 20-ம்தேதி வரை சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
சீனாவில் சிறுபான்மையினரான இசுலாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. 

இதனை காரணம் காட்டி, வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜ்ய ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்க அறிவித்தது. 
இதை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அரசு அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் வீரர்களை மட்டும் அனுப்புவோம் என அறிவித்தன. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன. 
இந்த நிலையில், தங்கள் மீது வீணாக பழிபோட்டு, ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்வதாக அமெரிக்காவை கண்டித்துள்ள சீனா, போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply