புற்றுநோயை தடுக்கும் கரட்!

  • Post author:
You are currently viewing புற்றுநோயை தடுக்கும் கரட்!

சத்துகள் நிறைந்தது கேரட் என்று நமக்குத் தெரியும். ஆனால் அது, புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் ஆகிறது.

கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ உயிர்ச்சத்து உள்ளது. இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள் தான் புற்றுநோய்க்கு எதிரியாக இருந்து வருகிறது.

நம் உடலுக்கு இயற்கையாக பச்சை காய்கறிகளால் கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது கேரட் ஆகும். நம்முடைய உணவு முறையால் தான் நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

தாவரவியல் பெயர் : டாக்குஸ் கேரட்டா

தமிழ் பெயர் : செங்கிழங்கு, தங்கக்கிழங்கு

ஆங்கிலப்பெயர் : கேரட்

கேரட்டிற்கு “தாவரத் தங்கம்” என்று பெயர். தங்கநகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகு சேர்க்கின்றதோ அதுப்போல கேரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும். அது மட்டுமில்லாமல் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு குணம் கேரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டுப்பிடிக்காத ஒரு மருந்து உண்டென்றால் அதில் புற்றுநோய் ஒன்று ஆகும். புற்றுநோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய்கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் கேரட்டிற்கு மட்டுமே உள்ளது.

கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ உயிர்ச்சத்து உள்ளது. இது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள் தான் புற்றுநோய்க்கு எதிரியாக இருந்து வருகிறது. எனவே கேரட்டை வாரத்தில் மூன்று நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. புற்றுநோய் வந்தபின்பு உண்பதை விட அதற்கு முன்பே கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கரட்டில் உள்ள சத்துப்பொருட்கள்

128 கிராம் கேரட்டில்

கலோரி சக்தி – 48 கலோரிகள்

புரதம்- 1.19 கிராம்

கொழுப்பு – 0.31 கிராம்

கார்போஹைட்ரேட்டுகள் – 12.26 கிராம்

நார்ச்சத்து – 3.6 கிராம்

கால்சியம் – 42 மி.கிராம்

இரும்புச்சத்து -0.38 மி.கிராம்

மக்னீசியம் – 15 மி.கிராம்

பாஸ்பரஸ் – 45 மி.கிராம்

பொட்டாசியம் -410 மி.கிராம்

சோடியம் – 88 மி.கிராம்

ஜிங்க்- 0.31 மி.கிராம்

பிபோலேட்-24 மைக்ரோ கிராம்

வைட்டமின் ஏ -1069 மைக்ரோகிராம்

வைட்டமின் சி-7.6 மைக்ரோகிராம்

வைட்டமின் கே- 16.9 மைக்ரோகிராம்

செரிமான சக்தி அதிகரித்தல்

கேரட் ஜுஸ் அருந்துவதால் தேவையான அளவு கலோரிகள் நிறைந்துள்ளன. மேலும், செரிமானத்திற்கு தேவையான என்சைம் மற்றும் பித்தம் உற்பத்தியை தூண்டி நம் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. தேவையான அளவு பித்தம் இருப்பதால் கொழுப்புகள் எளிமையாக செரிமானம் ஆகிறது. 2006-ம் ஆண்டு ஆய்வக சோதனை ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வக சோதனை உடல் எடையை குறைப்பதற்காக அல்பினோ என்ற எலியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மேற்கொண்ட ஆய்வின் மூலம் கேரட் சாறு அருந்துவதால் உடல் எடையை குறைக்கலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஏன் என்றால் கேரட்டில் நார்ச்சத்து மற்றும் கெட்ட கொலஸ்டீரால்-லை செரிக்கக்கூடிய என்சைம்ஸ்கள் நிறைந்துள்ளது.

கண்பார்வை திறன் அதிகரித்தல்

கேரட் உணவில் சேர்த்துக் கொள்வது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. கேரட் சாற்றில் பீட்டா-கரோட்டீன் நிறைந்துள்ளது. இது வைட்டமின் ஏ சத்தின் ஒரு பகுதியாகும். இது மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகும். “வைட்டமின் ஏ” கண் பார்வை திறனை அதிகரிக்கின்றது. கண்ணை பாதுகாக்கின்றது. தினந்தோறும் கேரட் சாறு அருந்துவதால் வயதான காலத்தில் உருவாகும் கண்பார்வை கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகின்றது.

கண்புரைநோய், மந்தப்பார்வை, குளுக் கோமா, மாலைக்கண், வெள்ளைழுத்து, கண்அழற்சி, வெள்விழி நோய்கள் முதலியன வராமல் தடுக்கப்படுகின்றது. மேலும் கேரட்டில் “லியூடின்” என்ற அமினோ அமிலம் உள்ளதால் இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைக்கொடுக்க கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட் ஆக செயல் படுகிறது. இது வயதான காலத்தில் உருவாகக் கூடிய டீஜெனரேடிவ் கண் நோய்களை வராமல் தடுக்கிறது. இதனால் கண்பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

தோல் நோய்கள் வராமல் தடுத்தல்

தோல் நோய் உள்ளவர்களுக்கும் மேலும் தோல்நோய் வராமல் இருப்பதற்கும் கரட் சாறு வாரத்தில் 3 நாட்கள் தினம் 60மிலி அருந்துவது மிகவும் நல்லது. வைட்டமின் ஏ- யில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி சத்து கேரட்டில் அதிகம் நிறைந்துள்ளதால் தோல் நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் தோல் நோய்களில் உண்டாகும் அரிப்பு, தடிப்பு, புண் இவைகளை எளிதில் ஆற்றுகிறது. தீராத வியாதிகளான சோரியாசிஸ், கரப்பான் மற்றும் அக்கி, அம்மை போன்ற தோல் நோய்கள் உள்ளவர்கள் கேரட் சாறு தினம் அருந்துவதால் சீக்கிரம் இந்நோய்கள் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதல்

வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகிய சத்துகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. மேலும் சளி, இருமல், சுரம் முதலியன அடிக்கடி உருவாகாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

புற்றுநோய் செல்களை அழித்தல் உடலில் உண்டாகும் தேவையற்ற அழுகிய செல்கள் மென்மேலும் வளராமல் தடுக்கப்படுகிறது. உடலில் உண்டாகும் கெட்டச்செல்களை அழிக்கின்றது, நுண்கிருமிகளை அழிக்க வல்லது. கேரட் சாறு தினந்தோறும் அருந்துவதால் உடலில் உள்ள நுண் செல்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் சரியான அளவில் கிடைக்கின்றது. இதனால் திசுக்களின் செயல்பாடு இயல்பாக இருக்கும். பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் உடலில் உண்டாகும் தேவையற்ற திசுக்களை கட்டுப்படுத்துகின்றது.

உடலில் உண்டாகும் எல்லா வகையான புற்றுநோய் செல்களையும் அழிக்கின்றது. குறிப்பாக ரத்தப்புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. ஆண்களுக்கு உண்டாகும் புரஸ்தகோள புற்றுநோய் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. கேரட் இயற்கையில் மிகச்சிறந்த கீமோ தெரபியாக செயல்படுகிறது.

கர்ப்பிணிகளின் ஆரோக்கியம்

கேரட் ஜுஸ் அருந்துவதால் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது. இதில் கால்சியம், போலேட், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளதால் கருவளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. சிசுவின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. சிசுவின் மூளையின் செயல்திறனை ஊக்கப்படுத்துகின்றது. கர்ப்பினிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் சிசுவிற்கு தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கின்றது.

மூளை செயல்திறன் அதிகப்படுத்துதல்

அனைவருக்குமே வயது அதிகரிக்கும் போது மூளை செயல்திறனில் குறைபாடு, மந்தநிலை ஏற்படுவது இயற்கையாகும். எனினும் பீட்டா-கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்கள் நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு மூளை சுறுசுறுப்பாகவும் செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும். இதற்கான சிறந்த உணவுகளில் ஒன்று கேரட் ஆகும்.

நீரிழிவு நோயை வராமல் தடுத்தல்

நீரிழிவுநோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் பெரும்பாலும் இயற்கையான உணவுகளை சாப்பிடுவது அவர்களின் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கேரட் பற்றிய ஒரு மருத்துவ ஆய்வில் கேரட்டை அதிகம் சாப்பிட்டு வந்த நபர்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான அளவில் வைக்க உதவுகிறது.

விந்தணு குறைபாடு ஏற்படாமல் தடுத்தல்

ஆண்கள் கேரட் தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும் எனவே மலட்டுத்தன்மை உள்ளவர்கள் மற்றும் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட்டை தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது.

பெண்களுக்கான இயற்கை மருந்து

பெண்களுக்கு மாத விலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு கருவுற்ற பெண்கள் தினமும் கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சோகை முதலியன வராது. பிறக்கும் குழந்தை நல்ல நிறமாகவும் வலுவாகவும் இருக்கும். தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு தினமும் 1கப்-60மிலி அருந்துவது நல்லது. கேரட் உண்பதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

அல்சர் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துதல்

பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது. அல்சர் நோய் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாள் வீதம் மூன்று மாதம் கரட் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பிரச்சினைகள் வராது. மேலும் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

நுரையீரலுக்கு புத்துணர்ச்சி அளித்தல்

தினமும் 1 கப் (60 மிலி) கேரட் சாறு குடிப்பதால் நம்முடைய நுரையீரலுக்கு மிகவும் நல்லது. கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதால் நம்முடைய சுவாச பிரச்சினைகள் நீங்கும்.

குருதியழுத்தத்தை கட்டுப்படுத்தல்

கேரட்டில் நம் உடலுக்குத் தேவையான அளவு பொட்டாசியம், சோடியம் உள்ளதால் வாரத்தில் ஏதாவது மூன்று நாள் உணவில் சேர்த்து வந்தால் குருதி அழுத்தம் சமநிலையில் வைக்க உதவும். அதிகுருதியழுத்த நோய் உடையவர்கள் கரட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.

பகிர்ந்துகொள்ள