தமிழீழ விடுதலைப் புலிகள் வரலாற்றில்
முதல் முதலாக விமான எதிர்ப்பு பிரிவினரால் 28.04.1995ம் ஆண்டு முதல்
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இரண்டாவது
விமானம் 29.04.1995ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது.
இச்சம்பவங்களில் 90 இற்கும் அதிகமான
சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணம்
நவக்கிரி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்ற
வேளை எவருமே நம்ப முடியாத வரலாற்று
சம்பவத்தை நடத்தி முடித்தனர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
“அவ்ரோ 748” ரக விமானம் விங் கொமாண்டர் றோஜர் வீரசிங்க மற்றும் ஐம்பது படையினருடன் புறப்படும் வேளையில் மழை பெய்கிறது.
புறப்பட்டுச் சில விநாடிகளுள் ஒரு வெடிப்புச்சத்தத்துடன் இரண்டாவது இயந்திரத்தில் தீ பற்றிக் கொள்கிறது. உடனடியாக ஓடுபாதை நோக்கி விமானத்தைத் திருப்ப விமானிகள் எடுத்த முயற்சி பயனளிக்காது கடலில் வீழ்ந்து வெடிக்கிறது.
“பதினாறு மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது”என்கின்ற தலைப்பில்அன்றைய நாளில் ஈழநாதம் செய்தியாக்கியிருந்தமை நினைவிற்கொள்ளத்தக்கது.