யாழ்ப்பாணம் – புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களிற்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேணி சிறீலங்கா காவல்துறையினர் ஒப்படைக்கப்பட்டனர்.
மருதங்கேணி சிறீலங்கா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.