“2023 BU” என அழைக்கப்படும் சிறுகோள், பூமிக்கு மிக அண்மையாக வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே நேரப்படி நாளை, 27.01.2023, அதிகாலை 01:27 மணிக்கு (பிரித்தானிய நேரம் 00:27) பூமியை கடக்கும் மேற்படி சிறுகோள், பூமியிலிருந்து சுமார் 3600 கிலோ மீட்டர்கள் தூரத்தில் பயணிக்குமெனவும், பூமிக்கு அருகில் இச்சிறுகோள் வரும்போது, தென்னமெரிக்காவின் தென் பகுதியே பூமியின் மிக அண்மையான பகுதியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 3.5 இலிருந்து 8.5 மீட்டர் விட்டத்தை கொண்டதாக கருதப்படும் இச்சிறுகோள், உக்ரைனின் பகுதியாக இருந்து தற்போது ரஷ்ய ஆளுமைக்குக்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள “Krim” தீவிலேயே முதமுதலில் அவதானிக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.