யாழ்.மாவட்டத்தில் 97 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 164 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த பெண்கள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியாசலை ஆய்வுகூடம் ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் மட்டும் 590 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவற்றின் அடிப்படையில்,
உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஊடாக பிசீஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 68 வயதுடைய பெண் ஒருவர்,
உயிரிழந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் ஊடாக பரிசோதனைக்கு பிசிஆர் மாதிரிகள் அனுப்பட்ட 78 வயதுடைய பெண் ஒருவர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 64 வயதுடைய பெண் ஒருவர் என மூவரின் சடலங்களிலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் அவர்களுக்கு கொரோனாத் தொற்று காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூட முடிவுகள் வருமாறு
யாழ்.மாவட்டத்தில் 77 பேர்
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 29 பேர்,
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 10 பேர்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 04பேர்,
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 08 பேர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 06 பேர்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,
அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர்,
வவுனியா மாவட்டத்தில் 32 பேர்
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,
நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 02பேர்,
செட்டிகுளம் ஆதாரவைத்தியசாலையில் 13 பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 13 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 174 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 20 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.