முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் சிறீலங்கா காவற்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இனம் காப்பட்டுள்ளன.
.jpg)