பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் மான்செஸ்டர் விமான நிலைய சம்பவம்!

You are currently viewing பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் மான்செஸ்டர் விமான நிலைய சம்பவம்!

மான்செஸ்டர் விமான நிலையத்தில் பயணி ஒருவரை பொலிசார் மிகக் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில், அவரது சட்டத்தரணி முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். விமான நிலையத்தில் பொலிசாரால் தாக்கப்பட்ட பயணியின் மூளையில் நீர்க்கட்டியுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் விமான நிலையம் முனையம் 2ல் நேற்று குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பகிரபப்ட்டு, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறித்த காணொளியில், ஒரு பொலிஸ் அதிகாரி மிக மோசமாக ஒருவரை தாக்குவதுடன், அவரது தலையில் காலால் ஆவேசமாக மிதிக்கிறார்.

இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தாக்கப்பட்ட நபரின் சட்டத்தரணி தற்போது வெளியிட்டுள்ள தகவலில்,

அவரது மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் குணமடைய ரார்த்தனை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதிருக்கும் முக்கிய கவலை என்னவென்றால், அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் இனி மேல நடக்கக் கூடாது என்பது தான் என்றார்.

இதனிடையே, சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி, இச்சம்பவம் தொடர்பில் துறை ரீதியான விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை சுமார் 8.25 மணியளவில் மான்செஸ்டர் விமான நிலையத்தில் சண்டை நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தொடர்புடைய நபரை கைது செய்ய முயன்ற பொலிசார் மூவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஒரு பெண் பொலிசாருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மூன்று பொலிசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் நால்வர் கைதாகியுள்ளனர். Amaad மற்றும் Fahir ஆகிய இருவருமே விமான நிலையத்தில் பொலிசாரால் தாக்கப்பட்டவர்கள். இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply