அடிப்படை பிரச்சனையை மடைமாற்றி நிறுவனங்களுக்கும் தனி மனித பெற்றோர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை என உருவகப்படுத்தப்பட்டு ஒரு முதலாளித்துவ போக்கை கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாகம் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.
சட்டப்படி இயங்கும் அமைப்பென்று மறைமுகமாக ஆக்கிரமிப்பாளர் பெற்றோரை மிரட்டி தங்கள் தவறுகளை மறைக்க முனைவது எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை உருவாக்கும் நிலைப்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தவறுகளை சுட்டிக்காட்டுகின்றவர்களும் குரல் எழுப்புகின்றவர்களும் முடக்கப்படுவதற்கு அச்சுறுத்தல் விடப்படுகின்றது என்றால் சனநாயகத்திற்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகவே பார்க்க முடிகின்றது.