
தொடர்ச்சியாக 4ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில்
பிற்பகல் 3மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்களுக்கு தமிழீழமே ஒற்றைத் தீர்வு என்றும் , சிறீலங்காவின் சனாதிபதி தமிழின படுகொலையாளி என்றும் சர்வதேசமே ஈழத்தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும், தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதின விசாரனை தேவை என்றும் மற்றும் பல அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி பன்னாட்டு ஊடகவியலாளர்களின் வருகையோடு பி.ப 4மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தொடர்ச்சியாக எமது மண்ணை மீட்கும் போராட்டத்தில் எமது மாவீரர்களும் மக்களும் கண்ட கனவினை நெஞ்சிலே நிறுத்தி 21/09/2020திகதி ஐநா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் சங்கமிக்கும் இலக்கோடு பல ஐரோப்பிய நாடுகளை ஊடறுத்து மனிதநேய ஈருருளிப்பயணம் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்,