
தொடர்ச்சியாக 3ம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது.
இன்று 06/09/2020 நெதர்லார்ந்து நாட்டின் பெரேடா மாநகரின் நகரபிதாவைச் இணையவழியில் சந்தித்ததுடன், தற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ்மக்கள் பல வகைகளில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும், 11 ஆண்டு காலம் கழிந்தும் தமிழர் தாயகத்தில் எம் இனம் ஒரு திட்டமிட்டமுறையில் மறைமுகமான இனவழிப்புக்குள்ளாக்கப் படுகின்றார்கள் எனவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் பற்றியும், பல முக்கிய அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களினால் மனு கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பி.பகல் 1.00 மணியளவில் பெல்ஜியம் நாட்டைவந்தடைந்த ஈருருளிப்பயணம்,அன்வெர்பன் நகரின் நகரசபை முன்றலை வந்தடைந்த மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களை வரவேற்கும் முகமாக அன்வெர்பன வாழ் தமிழீழ உணர்வளார்கள் ஒன்று கூடியிருந்தர்கள்.


இதனைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழ் மக்களுடன்
கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. ஐக்கியநாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 45ஆவது கூட்ட தொடரில்
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 07/09/2020 திங்கட்கிழமை 15.00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் (Rond-Pond Robert SCHUMANN, 1000 Bruxelles) கவனயீர்ப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன் தமது அறவழிப் போராட்டமான ஈருருளிப் பயணத்தின் வலிகளையும் ,ஆறுதல்களையும், நம்பிக்கையையும் மக்களுடன் பகிர்நது கொண்டதுடன்,நாளை 07/09/2020அன்று புருஸ்செல் நகரை வந்தடையவுள்ளது ஈருருளிப் பயணம். நாளை பி.பகல் 3 மணியளவில் புருஸ்செல் நகரத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வை மேற்கொள்ளவுள்ள நேரத்தில் வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்து தமிழ் உறவுகளையும் இவ் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அறைகூவல் விடப்பட்டது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”