பெல்ஜிய இளவரசர் Joachim, ஸ்பெயினில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நண்பர்களுடன் விருந்து வைத்த காரணத்தினால் அவருக்கு 10,400 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 பரிசோதனையில் நேர்மறை முடிவை பெற்ற 28 வயதான இளவரசர், இந்த விதிமுறை மீறலை ஒப்புக்கொண்டார். அவர் சுமார் 110,000 குரோனர் அபராதத்தை ஏற்றுக்கொண்டு 15 நாட்களுக்குள் அதை செலுத்தினால், அந்த தொகை பாதியாக குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கோர்டோபாவில் (Cordoba), 15 க்கும் மேற்பட்ட நபர்கள் குழுக்களாக கூடுவது தடை செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் இந்த விருந்து கொண்டாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .
ஸ்பெயினில் இதுவரை 27,000 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. ஜூன் மாதம் முடியும்வரை ஸ்பெயினில் தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.