பொருளாதாரத்தை 6 மாதங்களில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நான் பதவி விலகத் தயார்!

You are currently viewing பொருளாதாரத்தை 6 மாதங்களில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நான் பதவி விலகத் தயார்!

பொருளாதாரத்தை 6 மாதங்களில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நான் பதவி விலகி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயார். அத்துடன் அனுரகுமார திஸாநாயக்க கூறும் திட்டங்கள் நிறைவேறுமாக இருந்தால் அவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வெல்லவும் முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பில் விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தை தம்மிடம் ஒப்படைத்தால் ஆறு மாதங்களில் நாட்டை மீட்டெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உண்மையில், அதைச் செய்ய முடிந்தால் அது மிகவும் நல்ல விஷயம். பொருளாதார வளர்ச்சி சரிந்த நாட்டை ஆறு மாதங்களில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்குக் கொண்டு செல்வது உலகில் எந்த நாட்டிலும் நடக்காத செயல். ஆனால் அனுரகுமார திஸாநாயக்கவின் கருத்தை நாம் நிராகரிக்க முடியாது.

அவர் கூறுவதை போன்று ஆறு மாதங்களுக்குள் நாட்டை மீட்டெடுக்கும் திட்டம் இருந்தால் நல்லது. அத்தகைய திட்டத்தால், குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அதுமட்டுமின்றி உலகிற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகவும் அமைகிறது.

இதனால் இந்தத் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு அனுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர் ஜனாதிபதியிடம் செல்ல விரும்பவில்லை என்றால் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்கின்றேன். அதை பாராளுமன்றத்தில் விவாதிப்போம்.

அந்தத் திட்டம் இப்போது செயல்படுத்தும் திட்டத்தை விட சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் அதைச் செயல்படுத்துவோம். அத்தகைய திட்டம் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வெல்லும் அளவுக்கு சிறப்புடையதாக இருக்கும்.

அவரிடம் அவ்வாறான திட்டம் இருந்தால் நான் அவருக்கு எனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயார். இதனால் அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்குமாக இருந்தால் நான் பதவி விலகுகின்றேன்.

நாங்கள் அனைவரும் பதவி விலகுவோம். இதன்படி அனுரகுமார திஸாநாயக்கவை பிரதமராக நியமிக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்.

வீதிகளில் இறங்கி பேரணிகளை நடத்த வேண்டிய அவசியம் கிடையாது. குறிப்பாக வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் இந்த பாராளுமன்றத்தை கூட்டி இது தொடர்பில் வாதப் பிரதிவாதங்களை நடத்தி அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியுமென்றால் எந்த பயமும் இன்றி நாங்கள் அவருக்கு நாட்டை ஒப்படைப்போம்.

நான் மக்களுக்கு பொய்சொல்ல வருப்பம் இல்லை.எங்களை விட வேறுயாருக்காவது நல்ல வேலைத்திட்டங்கள் இருந்தால் அவற்றை அவர்களிடம் ஒப்படைப்போம்.

இதன்படி 6மாதங்களில் பொருளாதாரத்தை அனுரகுமாரவுக்கு கட்டியெழுப்ப முடியும் என்றால் நாங்கள் அனைவரும் பதவி விலகி, அவருக்கு அரசாங்கத்தை ஒப்படைக்கதயார். அவர்கள் இணங்கினால் விமல் வீரவன்சவை சபை முதல்வராக்குவோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply