பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

You are currently viewing பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது.

அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும் பொருளாதார மந்த நிலையால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது.

அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம் ஒரு புதிய சுற்று பணி நீக்கங்களுக்கு திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த வாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, கடந்த நவம்பரில் 13 சதவீதம் ஊழியர்களை குறைத்துள்ளது.

அதேபோல், மேலும் திறமையான நிறுவனமாக மாற்றும் முயற்சியிலும் மெட்டா ஈடுபட்டுள்ளது. அதன் முந்தைய சுற்றுகளில், மெட்டா நிறுவனம் 11,000 தொழிலாளர்களைக் குறைத்தது.

இதுவே அந்த நிறுவனத்தின் முதல் பெரிய பணிநீக்கம் ஆகும். தனது நிறுவனத்தை சமன் செய்யவும், மேலாளர்களுக்கு தொகுப்புகளை வழங்கவும், தேவையற்றதாகக் கருதும் முழு குழுக்களை குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

அதன்படிதான் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது.

விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply