பொங்கு தமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள்!!

You are currently viewing பொங்கு தமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள்!!
கலாநிதி சிதம்பரநாதன் அவர்களது வழிகாட்டலில்
பொங்குதமிழ் ஈழத்தமிழ் இனத்தின் தேசிய எழுச்சியின் வடிவம். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களையும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு இடித்துரைக்கும் நிகழ்வாகவும் சர்வதேச சமூகத்திற்குப் பறைசாற்றும் நிகழ்வாகவும் அமைந்தது.
புலிகள் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவும், தமிழ் மக்களது உரிமைககளுக்காகவும் போராடுகின்றார்கள் என்பதனை உலகிற்குப் பறைசாற்றிய நிகழ்வாகவும் அந்நிகழ்வு அமைந்தது.
ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் அபிலாசைகள் என்பது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீரவே என்பதனை மீளவும் இடித்துரைத்த பேரெழச்சி நிகழ்வாக அமைந்தது.
பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற்ற பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து, பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாணவர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

17.01.2001 அன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள்!! 1

 

 

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள்!! 2

 

 

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள்!! 3
பகிர்ந்துகொள்ள

Leave a Reply