புர்கினா பாசோ நாட்டில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் (Burkina Faso) உள்ள மூலோபாய நகரம் கயா. இங்கிருந்து வடக்கே சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள பார்சலோகோ பகுதியில், மக்கள் குழுக்கள் மீது ஆயுதக்குழு ஒன்று சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதன் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களையும், இராணுவ ஆம்புலன்ஸையும் எடுத்துக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் 200 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு ஆயுதக்குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.