பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிக வேகம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கிய பேருந்துகளில் ஒன்று, நாட்டின் புகழ்பெற்ற ஒருரோ கார்னிவலுக்கு பயணித்த ஒரு குழுவை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், விபத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பொலிவியாவில் இதுபோன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலை விபத்துகள் தொடர்ந்து பதிவாகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை போடோசி பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன. இதற்குக் காரணம் போடோசி பகுதியின் மலைப்பாங்கான தன்மையும், சரியான சாலை பராமரிப்பு இல்லாததும் தான் என்று கூறப்படுகிறது.