பொலிவியாவில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
யோகல்லாவின் தென்மேற்கு நகராட்சியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்து சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, கிட்டத்தட்ட 800 மீட்டர் (2625 அடி) பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்ததாக உள்ளூர் மருத்துவமனையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மலைப்பாதையில் திருப்பங்கள் நிறைந்த பாதை என்று கூறிய அவர், பஸ்சின் வேகம் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.