நோர்வே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான “தொழிலாளர் கட்சி” (Arbeiderpartiet / AP) யின், ஒஸ்லோ நகர வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்கள் எழுந்திருந்த நிலையில், பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு, ஒஸ்லோ நகரின் துணை மேயரான “கம்சாயினி குணரத்தினம்” தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கட்சி இன்று, 01.12.2020 அன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, உத்தேச வேட்பாளர் பட்டியல் தெரிவில், 1 ஆம் இடம் கட்சியின் தலைவருக்கு ஒதுக்கப்பட்டு, 2 ஆம் இடத்தை “கம்சாயினி குணரத்தினம்” பெற்றுக்கொள்வாரென பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவின் ஏகமனதான முடிவின்படி, 2 ஆவது இடம், கட்சியின் இன்னொரு வேட்பாளரான “Zeinab Al – Samari” என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டதோடு, “கம்சாயினி குணரத்தினம்” 4 ஆவது இடத்துக்கு, அதுவும் இன்னொருவரோடு போட்டிபோடும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 4 ஆம் இடத்திலிருந்தும் மேலும் பின்தள்ளப்பட்ட அவர், பட்டியலில் 7 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டிருந்ததாக செய்திகள் வந்திருந்தன.
பட்டியலில் 2 ஆவது இடம் யாருக்கு என்பதில் கட்சிக்குள் தொடர்ந்து இழுபறி நிலவிவந்திருந்த நிலையில், 2 ஆவது இடம் “கம்சாயினி குணரத்தினம்” பெறுவாரா, அல்லது “Zeinab Al – Samari” பெறுவாரா என்பதற்கான பலப்பரீட்ச்சையாக, போட்டி வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதில், “கம்சாயினி குணரத்தினம்” 137 வாக்குக்களையும், “Zeinab Al – Samari” 119 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதன்படி, கட்சிக்குள் நடந்த பலப்பரீட்ச்சையில், “கம்சாயினி குணரத்தினம்” வெற்றிபெற்றதோடு, வேட்பாளர் பட்டியலில் 7 ஆவது இடத்திலிருந்து, 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மூலம்:
https://www.vg.no/nyheter/innenriks/i/GarvAV/kamzy-gunaratnam-nominert-paa-andreplass-i-oslo-ap
தொடர்புபட்ட செய்திகள்: